இது ஒரு திருமந்திரம். திருமூலரால் சொல்லப்பட்டது. A great saint who preached what he practiced. அத்துடன் சாதாரண மனிதனுக்கு மேம்பட்ட உன்னத சக்தி அவரிடம் இருந்தது. அவர் சொன்னதெல்லாம் (யோகா பற்றியும் அட்டமா சித்திகள் பற்றியும் – அவற்றை அடையும் முறையையும் விரிவாக சொல்லியுள்ளார்) நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம். (அதனாலேயே அவர் கூறியதெல்லாம் மந்திரம் எனப்படுகிறது)
ஆர்க்குமிடுமின் அவரிவர் என்னமின்
பார்த்திருந்து உண்மின் பழம் பொருள் போற்றுமின்
வேட்கையுடையீர் விரைந்து ஒன்றை உண்ணமின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே
அவர் சொல்வதன் அர்த்தம்: வீட்டிற்கு எவர் வந்தாலும், அவருடைய முந்தய நிலை எதையும் நினைக்காமல் அவருக்கு உணவளியுங்கள். அடுத்தவர் வருகை பார்த்து உண்ணுங்கள். பழம் பொருளை (இறைவனை) போற்றுங்கள் (உண்ணும்போது). அவசரப்பட்டு உண்ண வேண்டாம். காக்கை கரைந்துண்ணலை கருத்தில் வையுங்கள்.