Ponnampalam.Santhirasekari – பொன்னம்பலம். சந்திரசேகரி

Santhirasekari Aiya

Mr. P. Santhirasekari (பொ. சந்திரசேகரி, Ponnampalam Santhirasekari) led a life of ‘KARMAYOGA’. He became a teacher at Periyakulam and made his mark by his efficiency. He bought up 10 children empowered them and stood them worthy in the society. He was not just an executive of the teacher’s Union but a person who continuously laboured to raise it to higher level. He gave strength to the agricultural cooperative society of Nedunkulam. He was a political force who could compel the elected leaders. He was an ever available social counselor. In rendering help he was unselfish. The Tamil culture ‘VIRUNTHOMPAL’ embedded in the Holy Thirukkural was a norm at his home such that for all people known to him his house was a transit lounge. He lived for Tamil community in his own right. He was a friend philosopher and guide to me and many. Perhaps the most recognized senior citizen of my time, he was called and referred to as சந்திரசேகரி ஐயா or simply ஐயா by one and all. He life is an example for others to live their life usefully. தமிழுக்காய் வெண்கலக் குரல் ஒலித்திட தன்னலம் கருதாது வாழ்ந்த தலைவன்.

My salutation in his கல்வெட்டு

பெரியகுளத்தின் நீள்நிழல் – சந்திரசேகரி

புதிதாக வாங்கிய பளிச்சிடும் அங்கி
மிகத் தரமான நூலினால் இழைக்கப்பட்டது
பயனாளர் தரமும் தகுதியும் அறிந்து
சரிகையும் சேர்த்து அவருக்கென்றே
சாமனியது போல் புதுவருடம் பொங்கல்
பிறந்தநாள் என்று மட்டுமில்லாமல்
ஆண்டுகள் தலைமுறையும் தாண்டி
பண்டிகைகள் கொண்டாட்டம் யாவற்றிற்கும்
ஈற்றுவரை பயன்பட்டு இன்னும் ஏதும்
உண்டோ எனத் தேடியும் நினைக்க
ஏதும் தோன்றாத நிலையிலேயே இனி
இது வேண்டாம் என்றே களையப்பட்டது.
இதுதான் சந்திரசேகரி அய்யா !

அவர் ஆர்த்த பிறவி எடுத்த நாள்முதல்
ஆற்றாத கருமம் நாமறிந்ததில்லை
கமம் கல்வி என்று நிறைந்து வாலிபத்தில்
பெற்ற தகைமை தம் தனிக் குடும்பத்திற்காகவன்றி
வைகயத்திற்கே அர்ப்பணித்த பெருந்தகை
கைப்பிடித்த கன்னிகைக்கு நிறைவாழ்வு
சுற்றத்திற்கு உற்றவேளையில் உறுதுணை
யாவர்க்கும் இவற்றை விஞ்சும்
சிகரம் வைத்தாற்போல் சேவை
தமது பூவுடல் தாங்குமளவும் தந்து
இனியேதும் இல்லை என்ற நிலையில்
அதற்கு மேலும் பயனில்லை என்றே
துறந்தார் தம் உடலை நாம் துன்புறவே !!

அவர் சொல் எமக்கு சிறந்த கல்வி
அவர் செயல் என்றும் எமது சீர்
அவர் சிறப்பு எமக்கு என்றும் மதிப்பு
அவருடனான காலம் அழியாத கோலம்
அவர் வாழ்வோ யாவர்க்கும் வழிகாட்டி !!!

நகுலேஸ்வரன்
வவுனியா இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர்