நேரம்

நேரம்
சம வாய்ப்பளிக்கும் உலக முதலாளி
நடுநிலை தவறாத நீதிமான்
இம்மி பிசகாமல் மணிகளையும் மணித்துளிகளையும்
சகலருக்கும் ஒரே அளவில் வழங்குபவன்
செல்வந்தனால் விலைக்கு வாங்க முடியாது
மேலதிகமாக ஒரு மணி நேரத்தை
விஞ்ஞானியால் உருவாக்க முடியாது
மேலதிகமாக ஒரு மணித்துளியை
உன்னாலோ சேமித்து வைக்க முடியாது
இன்னொருநாள் உபயோகத்திற்கென சில மணிகளை
இவ்வளவிருந்தும் நேரம் ஒரு கனவான்
ஒப்பாரும் மிக்காரும் அற்ற தயாளன்
இதுவரை அது வழங்கியத்தை
எவ்வளவுதான் நீ வீணடித்திருந்தாலும்
நாளைய பொழுதை உனக்கு
அது முழுமையாக வழங்கும்